இந்தோனேசியாவில் குடிவரவு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 27 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைநகர் ஜகார்த்தாவின் தங்கேராங்கில் பல அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்கியிருந்த போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து குடிவரவுத் துறையின் தலைவர் ரக்கா சுக்மா பூர்ணாமா கருத்து வெளியிடுகையில்,
குடியிருப்புகளில் இலங்கையர்கள் தங்கியருப்பது தொடர்பில் அயலவர்கள் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவ பகுதிக்கு வந்த பொலிஸார் சோதனை மேற்கொண்டனர். இதன் போது அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த 27 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைரும் 2011ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குடிவரவுச் சட்டங்களை மீறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.