பார்த்திபனுக்கு டி. இமான் கொடுத்த சர்ப்ரைஸ்

பார்த்திபன் இயக்கும் புதிய படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.

இரவின் நிழல் வரிசையில் வித்தியாசமாக உருவாகும் இந்தப் படத்தின் பாடல் குறித்து டி இமான் இணைய பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அதில், சுனிதாசாரதி, கிறிஸ்டோபர் ஸ்டான்லி குரலில் கதாபாத்திர அறிமுகப் பாடல் முடிந்துவிட்டது எனவும், இந்தப் பாடலை பார்த்திபன் எழுதியுள்ளதாக டி.இமான் தெரிவித்துள்ளார்.

மேலும், படப்பிடிப்பு பணிகளின் போது பார்த்திபன், சுனிதாசாரதி, கிறிஸ்டோபர் ஸ்டான்லி, கீர்த்தனா பார்த்திபன் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது.

இதனால் பார்த்திபன் – டி இமான் கூட்டணியில் உருவான பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin