பிரித்தானியாவில் எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் அதிகம் பரபரப்பாக காணப்படும் ரயில் நிலையங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இது குறித்த தரவுகளை The Office of Rail and Road (ORR) வெளியிட்டுள்ளது.
அதன்படி கடந்த 2022 ஏப்ரல் 1ஆம் திகதியில் இருந்து 2023 மார்ச் 31ஆம் திகதி வரையில் லண்டன் லிவர்பூல் ஸ்ட்ரீட் நிலையம் (London Liverpool Street) 80.4 மில்லியன் நுழைவு பதிவுகள் (entries) மற்றும் வெளியேறுதல்களை (exits) கண்டுள்ளது.
இந்த பட்டியலில் லண்டன் பாடிங்டன் (London Paddington) 59.2 மில்லியனுடன் இரண்டாமிடத்தில் உள்ளது.
மூன்றாவது இடத்தில் லண்டன் வாட்ர்டலூ (London Waterloo) நிலையம் இருக்கின்றது.
1 ஏப்ரல் 2022 – 31 மார்ச் 2023 காலக்கட்டத்தில் பிரித்தானியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட முதல் 10 நிலையங்கள் பட்டியல்.