நடிகை ரச்சிதா மற்றும் தினேஷ் ஆகியோர் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனர். மீண்டும் சேர வாய்ப்பே இல்லை என ரச்சிதா பல முறை கூறி இருக்கிறார்.
கடந்த வருடம் பிக் பாஸ் 6ம் சீசனுக்கு போட்டியாளராக ரச்சிதா சென்றபோது அவர் தினேஷ் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் தினேஷ் வெளியில் ரச்சிதாவுக்கு ஆதரவாக தான் பேசி வந்தார்.
பிக் பாஸ் 7ல் தினேஷ்
இந்நிலையில் தினேஷ் தற்போது பிக் பாஸ் 7ம் சீசனில் வைல்டு கார்டு என்ட்ரி ஆக சென்று இருக்கிறார்.
அவர் வாழ்க்கை பற்றி பேசிய அவர், ‘என் வாழ்க்கை 8 வருடம் பின்னால் போனது போல் இருக்கிறது’ என கூறி இருக்கிறார்.
“வாழ்க்கை ரொம்ப unpredictable என சொல்வாங்க. ஆனால் அது இந்த அளவுக்கு இருக்குமா என என் வாழ்க்கையில் பல விஷயங்கள் நடந்தது” என ரச்சிதா பற்றி தினேஷ் மறைமுகமாக பேசி இருக்கிறார்.