தயிர்ச்சட்டி ஒன்றின் விலை தற்போது 500 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தேசிய வாடிக்கையாளர் முன்னணி தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது உற்பத்தி செய்யப்படும் பாலின் விலை குறைவடைந்துள்ளதாலேயே அவ் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது பால் உற்பத்திக்காக வெளிநாடுகளில் இருந்து பசுக்களை இறக்குமதி செய்வதற்கு எதிர்ப்பார்ப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.