தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள “கணேமுல்ல சஞ்சீவ” என அழைக்கப்படும் சஞ்சீவ குமார என்ற பிரபல குற்றக் கும்பலின் ஆயுதக் களஞ்சியத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
விசாரணைகளின் போது சந்தேகநபரால் வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில், பொலிஸாரால் 02 கைக்குண்டுகள், ஒரு மைக்ரோ சிறிய கைத்துப்பாக்கி, ஒரு ரிவோல்வர் மற்றும் 43 T-56 துப்பாக்கி தோட்டாக்கள் ஆகியவற்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த அயுதங்கள் நிட்டம்புவ மைம்புல பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
“கனேமுல்ல சஞ்சீவ” செப்டம்பர் 13 ஆம் திகதி நேபாளத்திலிருந்து வந்திறங்கிய போது, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ், பாதாள உலகப் பிரமுகரை விசாரிக்க, பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து 90 நாள் காவலில் வைக்கும் உத்தரவை பொலிஸார் பெற்றனர்.
படகு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்ததாகக் கருதப்படும் “கனேமுல்ல சஞ்சீவா”, கைது செய்ய இன்டர்போல் ‘ரெட் வாரண்ட்’ பிறப்பிக்கப்பட்டதன் பேரில் இலங்கைக்குத் திரும்புவதற்கு முன்பு, நேபாளத்திற்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.