இலங்கை தனியார் மின்சக்தி நிறுவனம் அல்லது LECO-வின் மின் கட்டணத்தில் இம்மாதம் முதல் (செப்டெம்பர்) சமூக பாதுகாப்பு வரி சேர்க்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் மின்சார சபையின் மின் கட்டணத்துடன் சமூக பாதுகாப்பு வரி சேர்க்கப்பட்டிருந்ததாக அதன் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர டி சில்வா தெரிவித்திருந்தார்.
சட்ட ரீதியிலான சிக்கல் காரணமாக இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தின் மின் கட்டணத்துடன் அதனை சேர்க்க முடியவில்லையென அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், தற்போது சட்டப்பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கதாகும்.