சரிவடைந்த தங்கத்தின் விலை!

செப்டம்பர் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் நேற்றையதினம் தங்கம் விலையானது திடீரென குறைந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைவடைத்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் சரிவில் தங்கம் விலை
சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது.

இன்றைய நிலவரம்
அதன்படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ. 5,480 ஆகவும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.43,840 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.4,489 ஆகவும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.35,912 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை
வெள்ளி விலை அதிரடியாக கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Recommended For You

About the Author: webeditor