திலீபன் நினைவேந்தல் தொடர்பான கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்குமாறு மாங்குளம் மற்றும் மல்லாவி பொலிஸார் விடுத்த கோரிக்கையை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு பொத்துவில் முதல் யாழ்ப்பாணம் வரையில் வாகன பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் குறித்த வாகன பேரணி முல்லைத்தீவு மாவட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவித்து, திலீபனின் நினைவேந்தலுக்கும் அந்த வாகன பேரணிக்கும் தடைவிதிக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை முல்லைத்தீவு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor