ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ள மலேசிய பிரதமர்

மலேசியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு அந்நாட்டு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் அடுத்த வருடத்தின் ஜனவரி அல்லது பெப்ரவரி மாதமளவில் மலேசியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள மலேசிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தங்களை கைசாத்திடுவது தொடர்பிலும் சாதகமான பதில் வழங்கிய மலேசிய பிரதமர் அடுத்த மாதம் கொழும்பில் நடைபெறவிருக்கும் IORA மாநாட்டில் மலேசிய வெளிவிவகார அமைச்சரின் பங்கேற்பையும் உறுதிப்படுத்தினார்.

மேலும் வலயத்தின் பரந்த பொருளாதார பங்காளித்துவமான (RCEP) இல் இணைந்துகொள்ள இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் மலேசிய பிரதமர் உறுதியளித்தார்

Recommended For You

About the Author: webeditor