யாழில் விஷமிகளால் படகிற்கு தீ வைப்பு!

யாழ் வடமராட்சி, பருத்தித்துறை முனைப் பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில் பாவனையற்றிருந்த பல நாள் படகுகிற்க்கு (multi day board) இனந்தெரியாதவர்கள் தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வேளை வீதியால் நடமாடும் சேவையில் ஈடுபட்ட பருத்தித்துறை பொலிஸார் அவ் விடயம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசுங்கவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் அழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பொலிஸாரின் துரித செயற்பாட்டின் மூலம் முனை பிரதேசத்தில் பல படகுகள் தீப்பற்றாமல் காப்பாற்றப்பட்டுள்ளதாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor