வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்! யாழில் இளைஞன் வெறிச்செயல்!! ஐவர் காயம்!!!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி வன்னியசிங்கம் வீதியிலுள்ள வீடு ஒன்றின் மீது இன்று அதிகாலை 3.00 – 4.00 மணிக்குட்பட்ட நேரத்தில் பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவ் வீட்டில் நின்ற வாகனங்களின் கண்ணாடிகள் மற்றும் வீட்டிலுள்ள உடமைகள் என்பன அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

குறித்த தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உடும்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பெற்றோல் குண்டு தாக்குல் நடத்தப்பட்ட வீட்டில் உள்ள யுவதியை காதலித்ததாகவும் பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்குமாறு கூறிய போது பெற்றோர் மறுத்திருந்த நிலையில் குறித்த இளைஞன் தனது குழுவினருடன் வந்து இன்று அதிகாலை வீட்டினை தாக்கி சேதப்படுத்தி வீட்டில் பெற்றோல் குண்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN