அம்பாறை – நிந்தவூரின் வரலாற்றில் முதன் முறையாக வைத்தியத் துறைக்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழ் மாணவி என்ற சாதனையை ஜனுசிகா குணசேகரம் எனும் மாணவி படைத்துள்ளார்.
அதன்படி நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையில் இருந்து வைத்தியத்துறையில் கால் பதிக்கும் ஜனுசிகாவை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது.
அதேவேளை குறித்த மாணவி கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும் A சித்தி பெற்றிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.