யானை தாக்கியதில் காயமடைந்த சிறுவன்

பண்டாரவளையில் யானை தாக்கி சிறுவன் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரவளை கொஸ்லந்த பூனாகலை பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த சிறுவன்
பூனாகலை அம்பிட்டிகந்த பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுவன் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இச் சிறுவன் தமது தந்தையுடன் நேற்றிரவு பயணித்த போது அவர் யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்தநிலையில் சிறுவன் தற்போது பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor