சிறுப்பிட்டி நாகதம்பிரான் ஆலயத்தில் சிறப்புச்சொற்பொழிவு

சிறுப்பிட்டி நாகதம்பிரான் ஆலயத்தில் சிறப்புச்சொற்பொழிவு இடம்பெற்றது.
*****************************
யாழ்ப்பாணம் நீர்வேலி, சிறுப்பிட்டி மேற்கு அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தை முன்னிட்டு சிறப்புச்சொற்பொழிவு 05.09.2023 செவ்வாய்க்கிழமை தொடக்கம் 17.09.2023 ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் மாலை 6.00 மணிக்குச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெறவுள்ளது.

அந்தவகையில் 05.09.2023 செவ்வாய்க்கிழமை இளஞ்சைவப்புலவர் ச. நவநீதன் அவர்கள் ” அறுகம்புல்லும் விநாயகர் வழிபாடும் ” என்னும் விடயப்பொருளில் சொற்பொழிவு ஆற்றினார்.

சொற்பொழிவில் இருந்து மாணவர்களிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டுப் பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்பட்டது.

Recommended For You

About the Author: S.R.KARAN