கோழி இறைச்சி விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

ஒரு கிலோ கோழி இறைச்சியை 1250 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஹட்டன் பிரதேச கோழி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோழி விற்பனை
கோழி இறைச்சியின் விலையை (01) நள்ளிரவு முதல் கிலோ ஒன்று ரூ.1250/= க்கு விற்பனை செய்ய வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இருந்த போதிலும் அந்த விலையில் கோழி இறைச்சியை விற்பனை செய்ய முடியாதுள்ளதாக ஹட்டன் பிரதேச கோழி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்துக் கட்டணங்கள் மற்றும் இதர செலவுகளுடன் சேர்த்து ஒரு கிலோ கோழி இறைச்சியை ரூபா 1300/= என்ற விலையில் விற்க முடியும் எனவும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor