இலங்கையின் நிதி இராஜாங்க அமைச்சரான ரஞ்சித் சியம்பலாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இன்றைய தினம் காலை அவசர சிகிச்சைக்காக அமைச்சர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், உணவு நச்சுத்தன்மை காரணமாக அவர் நோய்வாய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது அமைச்சர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.