யாழ்ப்பாணம் , கல்வியங்காட்டு பகுதியில் போதகரை மிரட்டி கொள்ளை!

யாழ்ப்பாணம் , கல்வியங்காட்டு பகுதியில் உள்ள தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அருட்தந்தையரின் கழுத்தில் கத்தி வைத்து , பெருமளவான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

தேவாலயம் ஒன்றினுள் நேற்றைய தினம் வியாழக்கிழமை அத்துமீறி நுழைந்த நால்வர் கொண்ட கொள்ளை கும்பல் ஒன்று அருட்தந்தையரின் கழுத்தில் கத்தியை வைத்து , மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டது.

இதன்போது அருட்தந்தையரின் 30 ஆயிரம் ரூபாய் பணமும் , தேவாலய உண்டியலில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கொள்ளை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: webeditor