யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரையில் மது போதையில் குழப்பம் விளைவித்த 06 புலம்பெயர் தமிழர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந் நிலையில் அவர்களுடன் இருந்த நான்கு பெண்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பெண்கள் உள்ளிட்ட 10 பேர் கைது
வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பிய குறித்த நபர்கள் , வவுனியா பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரைக்கு சென்று நேற்று முன்தினம் பொழுதை கழித்துள்ளனர்.
அதன் போது , அவர்களில் ஒருவரின் மோதிரத்தை காணவில்லை என , கடற்கரையில் கடமையில் இருந்த உயிர்காப்பு பிரிவு பொலிஸாருடன் முரண்பட்டுள்ளனர்.
கனடா மற்றும் லண்டன் பிரஜைகள்
அது தொடர்பில் பொலிஸார் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து , கடற்கரைக்கு விரைந்த பொலிஸார் 06 ஆண்களையும் 4 பெண்களையுமாக 10 பேரையும் கைது செய்தனர்.


