அழைப்பு விடுக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

சர்வதேச காணாமால் ஆக்கப்பட்டவர்கள் தினத்தினை முன்னிட்டு, மன்னாரில் பாரிய பேரணி ஒன்றினை முன்னெடுக்க காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அறிவித்துள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் (24.08.2023) ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது எதிர்வரும் (30.08.2023) ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தையொட்டி மன்னார் சதோச புதைக்குழியில் இருந்து, விளையாடரங்கு வரையில் குறித்த பேரணி செல்லவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள், வர்த்தக சங்கத்தினர், தமிழ் தேசிய அரசியல்வாதிகள், அரசியல் செயற்பட்டாளர்கள், மத குருமார்கள் என அனைவருக்கும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

போராட்டத்திற்கு செல்வோருக்கான இலவச வாகன ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அறிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor