இந்தியாவின் பெங்களூரு நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த மூன்று இலங்கைப் பிரஜைகளை பெங்களூர் பொலிஸின் மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) கைது செய்துள்ளது.
கைதான இலங்கையர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
அடிப்படையில் மூன்று இலங்கையர்களையும் பெங்களூரின் புறநகர் பகுதி ஒன்றிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்குப் பெற்றுக் கொடுத்த இந்திய நாட்டவரையும் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் கைதாவர்களிடம் முன்னெடுக்கபப்ட்ட விசாரணையின் போது, சந்தேக நபர்களுக்கு இலங்கை பாதாள உலகத்துடன் தொடர்பு இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர் என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.