தந்தையை தாக்கிய மகள்

குடா உடுவ தளத்தில் தந்தையின் தொல்லை தாங்க முடியாமல் தந்தையை தடியால் தாக்கி படுகாயப்படுத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் மகன் கைது செய்யப்பட்டதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலில் காயமடைந்த தந்தை ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த நபர் குடா உடுவ தளம், மல்பெரி வத்த பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தடியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தந்தை ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விசாரணை
அத்தோடு சந்தேகநபரான மகன் இருபத்தி இரண்டு நாட்களாக வீட்டை விட்டு வெளியேறி நேற்றிரவு (23) வீடு திரும்பியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

காயமடைந்த தந்தை 24ஆம் திகதி அதிகாலை மகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் சந்தேகநபர் தந்தையின் கால்களிலும் கைகளிலும் தடியால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கை, கால்கள் உடைந்து பலத்த காயம் அடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் சத்திரசிகிச்சையின் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor