திருகோணமலை மாவட்டத்தில் நெடுங்காலமாக மறைமுகமாக இயங்கி வந்த விபச்சார நிலையம் ஒன்று மக்களால் சுற்றிவளைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கன்னியா பிரதேசத்தில் இலுப்பைக்குள வீதியில் நேற்று இரவு இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபச்சாரத்தில் ஈடுபட்ட இரு பெண்கள்
சுற்றிவளைப்பின் போது விடுதியில் இரகசியமாக விபச்சாரத்தில் ஈடுபட்ட இரு பெண்களை பிடித்து தம்மிடம் ஒப்படைத்தாக உப்புவெளி பொலிஸ் தெரிவித்துள்ளனர்.
ஒப்படைக்கப்பட்ட இருபெண்களும் 25 மற்றும் 30 வயதினர் எனவும் அநுராதபுரம், முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பெண்களை தாம் கைதுசெய்துள்ளதாகவும், இரு பெண்களையும் திருகோணமலை மாவட்ட பதில் நீதிவான் முன்னிலையிலையில் முன்னிலைபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.