தனஞ்சய 122 : இலங்கை அணி 312/10

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் காலியில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 312 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணி சார்பில் தனஞ்சய D சில்வா அதிரடியாகவும் பொறுப்பாகவும் துடுப்பெடுத்தாடி 122 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதேவேளை, அஞ்சலோ மத்யூஸ் 64 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இலங்கை அணி 60 ரன்களுக்குள் 4 விக்கெட்டுக்கள் இழந்து தடுமாறிய போது மத்யூஸ் – தனஞ்சய  ஜோடி சிறப்பாக துடுப்பெடுத்தாடி அணியை சரிவிலிருந்து மீட்டது.

நேற்றை நாள் ஆட்டம் இரண்டு தடவைகள் மழை குறுக்கிட்டதால் தடைப்பட்டது.

இதேவேளை, பாகிஸ்தான் அணி 10 ரன்களுக்குள் ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.

Mu

Recommended For You

About the Author: S.R.KARAN