யாழ்ப்பாண மாவட்டம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரது சடலம் நேற்றைய தினம் (13-06-2023) மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதான தெய்வேந்திரன் தேவராஜா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலத்தின் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் முன்னெடுத்தனர்.
இதேவேளை குறித்த நபரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்