அடுத்த மாதம் இந்தியாவிற்கு தனது உத்தியோகபூர்வ விஜயத்தை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ஜூலை 20 – 30 திகதிகளில் இலங்கை ஜனாதிப்தி இந்தியா செல்வார் என்று கூறப்படுகிறது.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.
மேலும் அங்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி Narendra Modi மற்றும் அரசாங்கத் தலைவர்களை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.