3 மாதங்களில் முப்பதாவது கைது! முன்னணியை இலக்குவைத்து அரச அராஜகம்!! சுகாஷ் கண்டனம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக அரச அராஜகம் திட்டமிட்டு இலக்குவைத்து அரங்கேற்றப்படுகின்றது என அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட சட்டத்தரணி க. சுகாஷ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

மூன்று மாதங்களில் முப்பதாவது கைது அரங்கேறியுள்ளது.எமது செயற்பாட்டாளர் ஜெ.சற்குணதேவி (அருள்மதி) 05.06.2023 இன்று அதிகாலை மருதங்கேணிப் பொலிஸாரால் காரணமின்றிக் கைது செய்யப்பட்டுள்ளார்.

(கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைத் தாக்கிச் சுட முயன்ற பொலிஸாரும் இதே பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது)

மீண்டும் கூறுகின்றோம், கைதுகளுக்கு அஞ்சிக் கொள்கையைக் கைவிட எம்மோடு நிற்பவர்கள் சோற்றுக்காகவோ போத்தலுக்காகவோ வந்தவர்களல்லர்!

க.சுகாஷ்,
ஊடகப் பேச்சாளர்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

Recommended For You

About the Author: S.R.KARAN