இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் நிர்வகிக்கும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் கடந்த ஆண்டு 27,647 மில்லியன் ரூபா இலாபம் ஈட்டியுள்ளது.
வரி செலுத்திய பின்னர் அதன் இலாபம் 4,803 மில்லியன் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஆண்டில் அரசாங்கத்திற்கு விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து நிறுவனம் 1,983 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக அதன் வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுசீரமைப்பு எங்களைப் பாதிக்காது. அது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸைப் பாதிக்கலாம் ஆனால் அது விமான நிலையத்தையும் விமான சேவையையும் பாதிக்காது.
அதற்குக் காரணம் நாங்கள் அரசாங்கத்திற்குச் சொந்தமான இலாபம் ஈட்டும் நிறுவனம். எங்கள் கடந்த ஆண்டு லாபம் 6.5 பில்லியன் ரூபாய். இந்த ஆண்டு எங்கள் இலக்கு 21.5 பில்லியன் ரூபாய் இலாபம்.
அதை எங்களால் ஈட்ட முடியும்” என விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.