தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைத் தாக்கிச் சுட பொலிஸ் புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அரச அராஜகம் எல்லை மீறுகின்றது!
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைத் தாக்கிச் சுட முயற்சி!
மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம் – எதிர்க்கின்றோம்.
மீண்டும் கூறுகின்றோம், உங்கள் துப்பாக்கிகளால் எங்கள் உரிமைக்கான தாகத்தைத் தணிக்கவோ அடக்கவோ கிஞ்சித்தும் முடியாது!
க.சுகாஷ்
ஊடகப் பேச்சாளர்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.