மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் நிகழ்வு!

மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் விழாவில் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் உரை
11.05.2023

மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் விழா 2020–2021’ நிகழ்வு கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று 2023 மே 11ஆம் திகதி நடைபெற்றது.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உள்ள ஜெஸ்மின் மண்டபத்தில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சுற்றாடல் அமைச்சர் பொறியியலாளர் நசீர் அஹமட், சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட மருத்துவர் அனில் ஜயசிங்க, கல்வி அமைச்சின் செயலாளர் திரு எம்.என். ரணசிங்க, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் திரு சுபுன் எஸ். பத்திரகே, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பதில் பணிப்பாளர் நாயகம் டொக்டர் திரு ஆர்.எம்.எஸ்.கே. ரத்னாயக்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

Recommended For You

About the Author: webeditor