யாழ் பிரபல சைவ உணவகத்தில் புழுக்கள்

யாழ்ப்பாணம் மாவட்டம் – ஸ்டான்லி வீதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உணவில் புழுக்கள் காணப்படும் காணொளியை ஒருவர் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில்,

“யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் உள்ள ஒரு பிரபல சைவ உணவகத்தில் வழங்கப்பட்ட உணவில் புழுக்கள். இதை தான் பலரும் ரசித்து ருசித்து உண்கிறார்கள். இப்படியான சுவையான புழு உணவு யாருக்கு வேண்டும்.”என பதிவிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor