யாழ் உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சி

யாழ் கல்விக் கண்காட்சி 2023 எனும் பெயரிலான உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இந்த கல்விக் கண்காட்சி நாளை 2 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் உமாமகேஸ்வரன், வடக்குமான கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ், இந்தியத் துணைத்தூதரக பதில் தூதுவர் ராம் மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கல்விக் கண்காட்சியில் பல சர்வதேச கல்வி நிறுவனங்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உயர்கல்வி வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக தமது ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்கிவருகின்றன.

Recommended For You

About the Author: admin