வட கிழக்கில் தமிழர்களின் இருப்பை அழிக்கும் திட்டமிட்ட செயற்பாடுகளைக் கண்டித்தும் அதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் கண்டனப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தலைமையில் யாழ்ப்பாணம் சங்கானைச் சந்தியில் இன்று காலை இப்போராட்டம் நடைபெற்றது.
இதன் போது வெடுக்குநாறி மலை எங்கள் சொத்து, கிண்ணியா எங்கள் சொத்து, நெடுந்தீவு எங்கள் சொத்து, கச்சதீவு எங்கள் சொத்து, அழிக்காதே அழிக்காதே தமிழினத்தை அழிக்காதே, தொல்லியல் திணைக்களமே வெளியேறு, வெளியேறு வெளியேறு படைகளே வெளியேறு, எங்கே எங்கே உறவுகள் எங்கே?, தமிழர்களின் தீர்வு சுயாட்சியே, எடுப்பது பிச்சை அறுப்பது எங்களின் கழுத்தையா? உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்