இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இந்துப் பண்பாட்டு நிதியம் ஆகியவற்றின் அனுசரணையுடன் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும் கணபதி ஹோமம் பயிற்சி நெறி வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் எதிர்வரும் 17 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி அருள்மிகு ஸ்ரீகிருஸ்ணர் ஆலயத்தில் கணபதி ஹோமம் பயிற்சி நெறி நடைபெறவுள்ளது என வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.