வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 19 மாணவர்கள் 9ஏ

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 19 மாணவர்கள் 9 பாடங்களில் ஏ சித்தியை பெற்றுள்ளனர் என பாடசாலை அதிபர் தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சையில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 177 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 19 மாணவர்கள் 9ஏ சித்திகளையும் 14 மாணவர்கள் 8ஏ சித்திகளையும் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 12 மாணவர்கள் 9 பாடங்களில் ஏ சித்தியை பெற்றுள்ளனர் என பாடசாலை அதிபர் ஏ. லோகேஸ்வரன் தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சையில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 239 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 12 மாணவர்கள் 9ஏ சித்திகளை யும் 14 மாணவர்கள் 8ஏ சித்திகளை யும் 9 மாணவர்கள் 7ஏ சித்திகளை யும் பெற்றுள்ளதுடன் 90 வீத மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin