கத்தாரில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது 18 இலிருந்து 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
2026 நவம்பர் 18ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட புதிய போக்குவரத்து சட்ட இலக்கம் 19/2026 இன் கீழ் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அரசிதழின்படி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உரிமம் அல்லது பயிற்சி அனுமதிப்பத்திரம் (Learner’s Permit) பெற விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 21 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். இதனுடன் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய தகுதிகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
வீதிப் பாதுகாப்பை மேம்படுத்துதல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் உயிர்கள், சொத்துக்களைப் பாதுகாத்தல் ஆகிய நோக்கங்களுடன் புதிய போக்குவரத்து சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது

