ஈரானின் ஏவுகணைகளுக்கான 2,000 கி.மீ. தூரக் கட்டுப்பாடு நீக்கம்!

ஈரானின் ஏவுகணைகளுக்கான 2,000 கி.மீ. தூரக் கட்டுப்பாடு நீக்கம்! – ஈரானிய இராணுவம் அறிவிப்பு!

ஈரானின் ஏவுகணைகள் அதிகபட்சமாக 2,000 கிலோமீற்றர் தூரம் வரை மட்டுமே செல்லும் என்ற அந்நாடு தானாக விதித்திருந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) அறிவித்துள்ளது.

கடந்த நவம்பர் 7ஆம் திகதி தெஹ்ரானில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய IRGC பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் ஹொசைன் மொஹெப்பி, ஏவுகணைகளின் தூரம் தொடர்பான கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா அல்லது இஸ்ரேலிடமிருந்து எந்தவொரு அச்சுறுத்தல் வந்தாலும், புவியியல் எல்லைகளைக் கருத்தில் கொள்ளாமல் உடனடியாகப் பதிலடி கொடுக்க வேண்டும் என ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா மொஜ்தபா கமேனி அண்மையில் தெரிவித்திருந்த கருத்தைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனினும், 2,000 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் செல்லக்கூடிய ஏவுகணைகளை ஈரான் தற்போது கொண்டுள்ளதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

அத்தகைய திறன்களைச் செயல்பாட்டில் நிரூபிக்க வேண்டும் என்றும் IRGC பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஏவுகணைகளுக்கான தூரக் கட்டுப்பாட்டை நீக்கியுள்ளதாக ஈரான் அறிவித்திருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Recommended For You

About the Author: admin