ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்காவே பொறுப்பு! ட்ரம்ப் நிர்வாகம் மீது பழியைச் சுமத்தும் இஸ்ரேல்!
ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களின் முழுப் பொறுப்பையும் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம்
மீதே சுமத்தும் வகையில் ஐநாவுக்கான இஸ்ரேலியத் தூதுவர் டேனி டானன் பகிரங்கமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது தாக்குதல் நடத்தும் முடிவு இஸ்ரேலால் எடுக்கப்படவில்லை என்றும், அது முழுக்க முழுக்க ஐக்கிய அமெரிக்காவின் முடிவு மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் நடவடிக்கைக்கு வெறும் ஆதரவு மட்டுமே தெரிவித்ததாகக் கூறி இஸ்ரேல் இந்தப் போர் விவகாரத்திலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள முயல்வது சர்வதேச அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

