கோதுமை மா விலை அதிகரிப்பு – பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலையும் உயர்வு!

கோதுமை மா விலை அதிகரிப்பு – பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலையும் உயர்வு!

கோதுமை மா விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலைகளை இன்று (21) நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளதால், உணவுப் பொருட்களின் விலைகளையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று நள்ளிரவு முதல் பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin