கந்தவிஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் விசாரணை

கந்தவிஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் விசாரணை – விசேட நாடாளுமன்றக் குழுவைக் கோரும் எதிர்க்கட்சி!

இலங்கையின் தேசிய இயற்கை மரபின் ஒரு பகுதியாகக் கருதப்படும் கந்தவிஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

 

இதற்கமைய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (21) இது தொடர்பான பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளனர்.

 

யானையின் மரணத்திற்கான சூழ்நிலைகளைக் கண்டறிதல், சம்பந்தப்பட்ட தரப்பினர் தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்றினார்களா என்பதை ஆராய்தல் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துதல் ஆகியவை இதன் நோக்கங்களாகும்.

 

குறித்த பிரேரணை நாடாளுமன்ற சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Recommended For You

About the Author: admin