அக்குறணையில் கோர விபத்து; நால்வர் உயிரிழப்பு – பலர் காயம்
கண்டி, அக்குறணை குருக்கொட சந்திப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. சிமென்ட் கலவை வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து, பல வாகனங்கள் மற்றும் வீதியில் பயணித்தவர்கள் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இவ்விபத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தைத் தொடர்ந்து குறித்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டதுடன், பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கான காரணம் தொடர்பில் இதுவரை முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பான மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

