ஆசியாவின் சிறந்த கடற்கரையாக இலங்கையின் அருகம் பே தெரிவு

ஆசியாவின் சிறந்த கடற்கரையாக இலங்கையின் அருகம் பே தெரிவு

2026ஆம் ஆண்டுக்கான Condé Nast Traveller வாசகர்களின் தெரிவு விருதுகளில், இலங்கையின் அருகம் பே ஆசியாவின் சிறந்த கடற்கரையாக முதலிடத்தைப் பெற்றுள்ளது.

ஆசியாவின் முதல் 20 கடற்கரைகளில் இலங்கையின் நான்கு கடற்கரைகள் இடம்பெற்றுள்ளன. அருகம் குடா முதலிடத்தையும், பெந்தோட்டை கடற்கரை 9ஆவது இடத்தையும், தங்காலை கடற்கரை 14ஆவது இடத்தையும், நீர்கொழும்பு கடற்கரை 19ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.

 

வாசகர்களின் மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்தத் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. அருகம் குடா 98.84 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்த அங்கீகாரம் இலங்கையின் கடற்கரை சுற்றுலாத்துறைக்குச் சர்வதேச அளவில் மேலும் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin