LOLC நிறுவனம் மக்கள் வங்கிக் கடன் தொடர்பான குற்றச்சாட்டுகளை நிராகரிப்பு – சட்ட நடவடிக்கை எடுக்கவும் எச்சரிக்கை
மக்கள் வங்கியுடனான கடன் வசதி தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளை LOLC Holdings PLC நிறுவனம் நிராகரித்துள்ளது.
குறித்த குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை எனத் தெரிவித்துள்ள நிறுவனம், ஒக்டோபர் 14ஆம் திகதி கொழும்பு பங்குச் சந்தைக்கு விளக்கமொன்றையும் சமர்ப்பித்துள்ளது.
மக்கள் வங்கியில் வைப்புச் செய்யப்பட்ட அமெரிக்க டொலர் வைப்புத் தொகையைப் பிணையாகக் கொண்டே இலங்கை ரூபாவில் கடன் பெறப்பட்டதாக நிறுவனம் விளக்கியுள்ளது.
இதனால் மக்கள் வங்கியின் வைப்பாளர்களின் பணத்திற்கு ஆபத்து இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், தவறான தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் நிறுவனம் எச்சரித்துள்ளது.

