ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்ட பேரணி ஜனாதிபதி செயலகத்தை வந்தடைந்தது

ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்ட பேரணி ஜனாதிபதி செயலகத்தை வந்தடைந்தது

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கலகொடஅத்தே ஞானசார தேரரைப் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட நடைபேரணி இன்று ஜனாதிபதி செயலக வளாகத்தை வந்தடைந்துள்ளது.

 

தேரர்களின் மத உரிமைகளை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட இந்தப் பேரணியில் நூற்றுக்கணக்கான தேரர்கள் பங்கேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் அதிகளவான பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

பேரணி காரணமாக காலி முகத்திடல் பகுதியில் கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

கண்டி தலதா மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள வாரியபொல சுமங்கல தேரரின் உருவச்சிலைக்கு முன்பாக கடந்த 10ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைபேரணி இன்று கொழும்பில் நிறைவடைகிறது.

Recommended For You

About the Author: admin