மஹிந்த நோய்வாய்ப்பட்டதாகப் பரவும் தகவல் பொய்! – ஊடகப் பிரிவு விளக்கம்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடுமையாக நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பரவும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ தற்போது தனது வீட்டில் தங்கியிருப்பதுடன், உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் எதிரிகள் திட்டமிட்டு இவ்வாறான வதந்திகளைப் பரப்புவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், பொய்ப் பிரசாரங்களால் முன்னாள் ஜனாதிபதியின் ஆளுமையைச் சிதைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை தொடர்பாகப் பரவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

