பொல்கஹவெல – பேராதனை இடையே இன்று முதல் புதிய ரயில் சேவை
பொல்கஹவெல சந்தி மற்றும் பேராதனை இடையே இன்று (12) முதல் புதிய தினசரி ரயில் சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த டிட்வா சூறாவளிக்குப் பின்னர், மலையகப் பாதையில் ரம்புக்கனைக்கும் கம்பளைக்கும் இடையிலான ரயில் சேவைகள் கடந்த 2ஆம் திகதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டு வழமைபோல் இயங்கி வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, பொல்கஹவெல சந்தி மற்றும் பேராதனைக்கு இடையே பயணிக்கும் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஏனைய பொதுமக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த புதிய ரயில் சேவை முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

