மஹிந்த ராஜபக்சவின் மனைவி கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதி

மஹிந்த ராஜபக்சவின் மனைவி கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதி

‘சிரிலிய சவிய’ நிதிய நிதியைத் துஷ்பிரயோகம் செய்ததாக எழுந்த புகாரின் பேரில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச, கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்ற உத்தரவின்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர், திடீர் உடல்நலக் குறைவு காரணமாகச் சிறைச்சாலை மருத்துவ அதிகாரிகளின் பரிந்துரைக்கமைய கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நிதி முறைகேட்டு வழக்கு விசாரணைக்காக அவர் தற்போது நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin