பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இலங்கையின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நீடித்துள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (12) மாலை 4 மணி முதல் நாளை (13) மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி, கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல, ருவன்வெல்ல, புலத்கொஹுபிட்டிய ஆகிய பகுதிகளுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

மேலும், பதுளை, கொழும்பு, கண்டி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Recommended For You

About the Author: admin