கொழும்பின் பல பிரதான வீதிகள் நீரில் மூழ்கின! – போக்குவரத்துக்கு பாதிப்பு!
கொழும்பு நகரில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் தொடர் மழை காரணமாகப் பல பிரதான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால், வாகனப் போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கின்சி வீதி, பஞ்சிகாவத்தை வீதி மற்றும் பேஸ்லைன் வீதியின் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் குறித்த வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மற்றும் பயணிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பாதுகாப்புப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், குறித்த பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், சாரதிகள் அவதானத்துடன் பயணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

