எரிசக்தி துறையில் கத்தார் – சவூதி அரேபியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

எரிசக்தி துறையில் கத்தார் – சவூதி அரேபியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

கத்தார் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கிடையில் எரிசக்தித் துறையில் கூட்டுறவை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஒக்டோபர் 11ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டுள்ளது.

 

சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்ற சர்வதேச எரிசக்தி மன்றத்தின் 17ஆவது அமைச்சர்கள் கூட்டத்தின் பின்னணியில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

 

கத்தார் எரிசக்தி விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் சாத் பின் ஷெரிடா அல் காபி மற்றும் சவூதி அரேபிய எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல் அஸீஸ் பின் சல்மான் அல் சவூத் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

 

எண்ணெய், இயற்கை எரிவாயு, மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுத்தமான ஹைட்ரஜன், எரிசக்திச் சேமிப்பு மற்றும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயற்படுவது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.

 

இரு நாடுகளிலும் உரிய சட்ட நடைமுறைகள் நிறைவடைந்த பின்னர் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin